வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 6 ஜனவரி 2023 (08:12 IST)

230வது நாளாக மாறாத பெட்ரோல் விலை.. எப்போதுதான் குறையும்?

petrol
சென்னையில் கடந்த 229 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற நிலையில் இன்று 230 வது நாளிலும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
இதனை அடுத்து சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை அதிகரித்து வந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து 30 சதவீதம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கிய எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு ஏற்ப பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது.
 
Edited by Siva