1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Rises Today: Investors Relieved!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் நிம்மதி..!

share
நேற்று வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை திடீரென சரிந்த நிலையில், இன்று மீண்டும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது. 
 
இன்று காலை முதலே பங்குச்சந்தை ஏற்றத்தில் வர்த்தகமாகி வரும் நிலையில், சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 400 புள்ளிகள் உயர்ந்து 82,652 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதே போல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 133 புள்ளிகள் உயர்ந்து 25,216 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர்,  இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐ.டி.சி., கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டி.சி.எஸ். உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதே நேரத்தில், டாடா ஸ்டீல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட சில பங்குகளின் விலை குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva
 
அடுத்த கட்டுரையில்
தங்கம் விலை இன்று திடீர் சரிவு.. இன்னும் குறையுமா? வாங்குவதற்கு சரியான நேரமா?