1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Share Market Remains Subdued, Sensex Sees Slight Gain

பங்குச்சந்தை வர்த்தகம் தொடர்ந்து மந்தம்.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

share
கடந்த சில நாட்களாகவே இந்திய பங்குச்சந்தை பெரிய அளவில் ஏற்றமும் இல்லாமல், இறக்கமும் இல்லாமல் மந்தமாக வர்த்தகமாகி வருகிறது. மொத்தமே நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் 100 புள்ளிகள் வித்தியாசத்தில்தான் வர்த்தகமாகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். இந்த நிலையில், நேற்று பங்குச்சந்தை வர்த்தகம் மிகவும் மந்தமாக இருந்தாலும், வர்த்தக முடிவில் கிட்டத்தட்ட 100 புள்ளிகளுக்கு மேல் சென்செக்ஸ் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில், இன்றும் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் பங்குச்சந்தை வர்த்தகமாகி வருகிறது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 100 புள்ளிகள் சரிந்து 83,433 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 36 புள்ளிகள் மட்டும் சரிந்து 25,434 இல் வர்த்தகமாகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. அதேபோல், அப்போலோ ஹாஸ்பிடல், ஏசியன் பெயிண்ட்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹீரோ மோட்டோகார்ப், இன்போசிஸ், ஐ.டி.சி., மாருதி சுசுகி, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் குறைந்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
 
About Writer
Siva