1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Rises for Second Consecutive Day Due to Ceasefire Announcement!

போர் நிறுத்தம் எதிரொலி: 2வது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. இனி ஜெட் வேகம் தான்..!

share
ஈரான் - இஸ்ரேல் போர் காரணமாக கடந்த சில நாட்களாக சரிந்து வந்த இந்திய பங்குச்சந்தை, நேற்று போர் நிறுத்த அறிவிப்பு வெளியானதால் உயர தொடங்கியது. இந்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக பங்குச்சந்தை தொடர்ந்து உயர்ந்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்று 540 புள்ளிகள் உயர்ந்து, 82,594 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 158 புள்ளிகள் உயர்ந்து, 25,200 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில், அப்பல்லோ ஹாஸ்பிடல், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், இண்டஸ்இண்ட் வங்கி, கோடாக் மஹிந்திரா வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டி.சி.எஸ் உள்ளிட்ட பல முன்னணி பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.
 
அதேவேளையில், கோடாக் மஹிந்திரா வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பி.எச்.இ.எல்., ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட சில பங்குகளின் விலை குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக, மத்திய கிழக்கு பதற்றம் தணிந்ததன் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
விண்வெளி நாயகா..! இன்று புறப்படும் ட்ராகன் விண்கலம்! - இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவிற்கு வாழ்த்து!