செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 19 ஜூன் 2025 (15:16 IST)

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!

இஸ்ரேல் பங்குச்சந்தை கட்டிடத்தை தாக்கிய ஈரான்.. அதிர்ச்சியில் முதலீட்டாளர்கள்..!
இஸ்ரேலின் பங்குச்சந்தை கட்டிடம் மற்றும் மருத்துவமனைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த ஒரு வாரமாக இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே மோதல் தீவிரம் அடைந்து வருவதால், மத்திய கிழக்கு நாடுகளில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று இஸ்ரேலின் பங்குச்சந்தை கட்டிடம் மீது ஈரான் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளதை அடுத்து, இஸ்ரேல் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
அதேபோல், இஸ்ரேல் நாட்டில் உள்ள முக்கிய மருத்துவமனைகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாகவும், இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
பங்குச்சந்தை கட்டிடம் மற்றும் மருத்துவமனை தாக்குதல் குறித்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே இந்த போர் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டிருக்கும் நிலையில், இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தி போரை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
 
Edited by Mahendran