1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. share market sensex and nifty status today

இன்று ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச்சந்தை: மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா?

பங்குச்சந்தை
கடந்த சில வாரங்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்றும் இன்றும் பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு சற்று நம்பிக்கையை அளித்துள்ளது. 62,000 க்கு மேல் இருந்த சென்செக்ஸ் புள்ளிகள் தற்போது 57,000 என்ற நிலையில் வர்த்தகமாகி வருவது பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் மீண்டும் பங்குச்சந்தை விஸ்வரூபம் எடுக்கும் என்ற நம்பிக்கை பலரிடம் உள்ளது
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 118  புள்ளிகள் உயர்ந்து 57,739 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 17001 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தை இதே வேகத்தில் ஏற்றமடைந்து மீண்டும் விஸ்வரூபம் எடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. கிராம் ரூ.6000ஐ நெருங்குவதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!