1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Sensex and Nifty today status

நீண்ட சரிவுக்கு பின் சற்று உயர்ந்த சென்செக்ஸ்: இன்றைய பங்குச்சந்தை நிலவரம்..!

பங்குச்சந்தை
பங்குச்சந்தை கடந்த சில வாரங்களாக சரிந்து வரும் நிலையில் இன்று சற்று உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் தொடங்கிய நிலையில் 148 புள்ளிகள் உயர்ந்து 57,675 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை 50 புள்ளிகள் உயர்ந்து 16 ஆயிரத்து 985 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
பங்குச்சந்தையில் சிறிய ஏற்றம் இருந்தாலும் மதியத்துக்கு பிறகு பங்கு சந்தை சரிய வாய்ப்பிருப்பதாகவும் எனவே முதலீட்டவர்கள் மிகுந்த கவனத்துடன் முதலீடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
10,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஈவினிங் ஸ்நாக்ஸ் வழங்கப்படும்: சென்னை மேயர் அறிவிப்பு