1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Share market sensex and nifty status

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

பங்குச்சந்தை
கடந்த வாரம் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளே பங்குச்சந்தை ஏற்றம் கண்டிருப்பது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 40 புள்ளிகள் அதிகரித்து 61,770 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 30 புள்ளிகள் உயர்ந்து 18,238 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. இன்று காலை பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்தாலும் மதியம் சரிய வாய்ப்பு இருப்பதாகவும் எனவே இன்று வர்த்தகம் செய்பவர்கள் மிகுந்த கவனத்துடன் தகுந்த ஆலோசனை பெற்று வர்த்தகம் செய்ய வேண்டும் என்றும் பங்குச்சந்தை ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து: முன்னாள் அமைச்சர் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்..!