இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி
இந்த வாரம் நேற்று பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் சுமார் 100 புள்ளிகள் சரிந்து 61,834 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 30 புள்ளிகள் சார்ந்து 18,257 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 62 ஆயிரத்தை நெருங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் காலத்தில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் முதலீட்டு ஆலோசகர்களின் ஆலோசனையை பெற்று வர்த்தகம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
Edited by Siva