3வது நாளாக சரிந்த சென்செக்ஸ்.. என்ன நடக்குது பங்குச்சந்தையில்?
மும்பை பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இந்த வாரம் இறங்கு முகமாகவே உள்ளது.
இந்த வாரம் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்றும் சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
சற்றுமுன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 70 புள்ளிகள் சரிந்து 62560 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 30 புள்ளிகள் சரிந்து 16615 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பின்ம் இன்று குறைவான சரிவு ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் என்றும் மதியத்திற்கு பிறகு சென்செக்ஸ் பாசிட்டிவாக திரும்ப வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது
Edited by Siva