புதிய உச்சத்தை நோக்கி சென்செக்ஸ்.. 63 ஆயிரத்தை நெருங்குவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 62 ஆயிரத்து 500 என்ற புதிய உச்சத்தை எட்டிய நிலையில் தற்போது 62 ஆயிரத்து 700ஐ தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ளது
அதுமட்டுமின்றி இன்னும் ஓரிரு நாள்களில் 63 ஆயிரத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுவதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
இந்த நிலையில் சற்று முன் மும்பை பங்கு சந்தையில் வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்சாக்ஸ் 40 புள்ளிகள் அதிகரித்து 62720 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது
அதே போல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 24 புள்ளிகள் அதிகரித்து 18 ஆயிரத்து 642 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
கடந்த சில நாட்களாக பங்குச் சந்தை ஏற்றம் பெற்றிருப்பதால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபம் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva