செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. வேளாண்மை
Written By Siva
Last Updated : திங்கள், 5 டிசம்பர் 2022 (10:12 IST)

பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றும் மீண்டும் சரிவு... முதலீட்டாளர்கள் அதிர்ச்சி

Share Market
மும்பை பங்கு தஞ்சை கடந்த சில நாட்களாக ஏற்றத்தில் இருந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திடீரென வீழ்ச்சி அடைந்தது என்பதை பார்த்தோம்.
 
இந்த நிலையில் இன்றும் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளது. சற்று முன்னர் மும்பை பங்குச்சந்தை தொடங்கிய நிலையில் 310 புள்ளிகள் சரிந்து 62 ஆயிரத்து 550 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 92 புள்ளிகள் சரிந்து 18604 என்ற புலிகளின் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் பங்குச் சந்தை ஏற்றத்தில் இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சென்செக்ஸ் ஒரு லட்சம் புள்ளிகள் வரை தொடும் என்றும் கூறப்படுகிறது
 
 இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை ஓரளவு அதிக வாய்ப்பு இருப்பதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva