1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Sensex ends with increase

மும்பை பங்குச்சந்தை - உயர்வுடன் முடிவு; முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!!

மும்பை பங்குச்சந்தை
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே உயர்ந்துள்ளதை அடுத்து முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 
 
கடந்த சில வாரங்களாக உக்ரைன் மீது ரஷ்யா போர் மற்றும் பணவீக்கம் காரணமாக பங்குச்சந்தை வீழ்ச்சி அடைந்தது என்பதும் இதனால் முதலீட்டாளர்கள் லட்சக்கணக்கில் தங்களுடைய முதலீடுகளை இழந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்படுகிறது. ஆம், மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 656 புள்ளிகள் உயர்ந்து 53,384 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குசந்தை குறியிட்டு எண் நீஃப்டி 196 புள்ளிகள் உயர்ந்து 15,895 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
அடுத்த கட்டுரையில்
புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் கிழிக்கப்பட்ட ஓபிஎஸ் படம்!