1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 25 மார்ச் 2022 (10:07 IST)

இன்றும் உயர்ந்தது பெட்ரோல் மற்றும் டீசல் விலை!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக பெட்ரோல், மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதை ஏற்கனவே பார்த்தோம். 

 
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
 
137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டதால் வாகன ஓட்டிகள்,  இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கூறியது போல இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. 
 
அதன்படி சென்னையில் இன்று காலை பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் உயர்ந்து ரூ.103.67 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் 76 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.93.71 காசுகளுக்கு விற்பனையாகிறது.