1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 24 மார்ச் 2022 (15:28 IST)

கெளதமியின் 6 வங்கிக்கணக்குகள் முடக்கம்: சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

நடிகை கெளதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட வழக்கில் அந்த கணக்குகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
 ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள விவசாய நிலம் ஒன்றை வாங்கியதாக கெளதமி மீது பதிவு செய்த வழக்கில் நடிகை கவுதமியின் 6 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன 
 
இந்த நிலையில் இது குறித்த வழக்கு இன்று மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது மூலதன ஆதாய வரி 25% செலுத்திய பிறகு நடிகை கவுதமியின் முடக்கப்பட்ட கணக்குகளை விடுவிக்கலாம் என வருமான வரித்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது