செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 மார்ச் 2022 (17:30 IST)

மாணவிகளிடம் பாலியல் சீண்டல்: சென்னை யோகா மாஸ்டர் கைது

யோகா கற்றுத் தரும் யோகா மாஸ்டர் ஒருவர் தன்னிடம் யோகா பயிற்சி பெற வந்த மாணவிகளிடம் பாலியல் சீண்டல் செய்ததால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை தண்டையார்பேட்டை மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் யோகா மாஸ்டர் சந்தானம் என்பவர் மாணவிகளுக்கு யோகா கற்றுக்கொடுத்து வந்தார் 
இலவசமாக பயிற்சி அளிக்கிறேன் என்ற பெயரில் மாணவிகளிடம் அவர் அத்துமீறி பாலியல் செயலில் ஈடுபட்டதாக தெரிகிறது
 
இதுகுறித்து குழந்தைகள் நல உறுப்பினர்கள் லலிதா என்பவர் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் யோகா மாஸ்டர் சந்தானம் என்ற 47 வயது நபர் கைது செய்யப்பட்டார்.