புதன், 1 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2022 (15:53 IST)

சென்னையில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்- மாநகராட்சி அறிவிப்பு

Chennai
சென்னையில் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அப்ணிய வேண்டுமென மா நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து 2020 ஆம் ஆண்டு கொரொனா தொற்று இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பரவியது. சில மாதங்களாக இத்தொற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவி வருகிறது.

குறிப்பாக, சென்னையில் கடந்த 2 நாட்களாக கொரொனா அதிகரித்துள்ளது. இந்த நிலையில், சென்னையில்  சென்னையில் பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அப்ணிய வேண்டுமென மா நகராட்சி அறிவுறுத்தியுள்ளது. அதில், சளி, காய்ச்சல், இருப்பின் சுய மருத்துவம் பார்க்காமல், மருத்துவர்களை அணுக வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும்  முகக் கவசம் உள்ளிட்ட  நெறிமுறைகளைப் பின்பற்றும்படி ம நகராட்சி அறிவுறித்தியுள்ளது.

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் கணிசாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.