1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Rises for Fifth Consecutive Day

இந்த வாரம் முழுவதும் ஏற்றம் தான்.. பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம்..!

பங்குச் சந்தை
இந்தியப் பங்குச்சந்தை இந்த வாரம் முழுவதும் ஏற்றத்துடன் வர்த்தகமாகி, முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. திங்கட்கிழமை முதல் வியாழன் வரை தொடர்ந்து நான்கு நாட்கள் உயர்ந்த நிலையில், ஐந்தாவது நாளான இன்றும் பங்குச்சந்தை உயர்ந்துள்ளது.
 
 
மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் இன்று 185 புள்ளிகள் உயர்ந்து, 81,703 புள்ளிகளுடன் வர்த்தகமானது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி 52 புள்ளிகள் அதிகரித்து, 25,073 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
 
 
நிஃப்டி பட்டியலில் உள்ள ஆக்ஸிஸ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ், பார்தி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஜியோ ஃபைனான்ஸ், கோடக் மஹிந்திரா வங்கி, மாருதி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டி.சி.எஸ். உள்ளிட்ட பல நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாயின.
 
அதே சமயம், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐ.டி.சி., சன் ஃபார்மா, டைட்டன் போன்ற சில நிறுவனங்களின் பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகின்றன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
ரூ.82,000ஐ நெருங்கியது ஒரு சவரன் தங்கம்.. விரைவில் ரூ.1 லட்சத்தை எட்டுமா?