1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market: A Positive Start to the Week

வாரத்தின் முதல் நாளே ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

பங்குச்சந்தை
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாள் ஏற்றத்தில் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 195 புள்ளிகள் உயர்ந்து 80 ஆயிரத்து 909 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதை போல் தேசிய பங்குச்சந்தை விட்டு 58 புள்ளிகள் உயர்ந்து 24 ஆயிரத்து 799 என்ற புள்ளிகள் வர்த்தகமாக வருகிறது. 
 
இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், hcl டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, ஜியோ பைனான்ஸ், ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன. 
 
அதேபோல் அப்பலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹீரோ மோட்டார்ஸ், indusind வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, மாருதி, சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிவில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால் இன்னும் அதிக வரி: டிரம்ப் எச்சரிக்கை..!