1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Stock Market Rises for Second Straight Day

2வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. இன்று என்னென்ன பங்குகள் உயர்ந்துள்ளன?

பங்குச்சந்தை
பங்குச்சந்தை நேற்று வாரத்தின் முதல் நாளில் உயர்ந்த நிலையில், இன்றும் இரண்டாவது நாளாக உயர்ந்து வர்த்தகம் ஆகிறது. இது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 214 புள்ளிகள் உயர்ந்து, 81,200 புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 61 புள்ளிகள் உயர்ந்து, 24,834 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
 
இன்றைய வர்த்தகத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல் டெக்னாலஜி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஹிந்துஸ்தான் லீவர், இன்போசிஸ், ஐடிசி, ஜியோ ஃபைனான்ஸ், சன் பார்மா, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தன.
 
அதேபோல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, பாரதி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் ஃபைனான்ஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிந்து வர்த்தகம் ஆகின்றன.
 
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
7 மாதத்தில் ஆயிரம் கோடி சைபர் மோசடி! எல்லாம் பொதுமக்கள் பணம்! - அதிர்ச்சி ரிப்போர்ட்!