தொடர்புடைய செய்திகள்
- நேற்றைய சரிவுக்கு பின் இன்று பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம்.. ஆனால்...
- வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சி..300 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்.. நிப்டி நிலவரம் என்ன?
- பங்குச்சந்தை இன்று மீண்டும் உயர்வு.. சென்செக்ஸ் மீண்டும் 84000க்கு அருகில்..!
- போர் நிறுத்தம் எதிரொலி: 2வது நாளாக பங்குச்சந்தை உயர்வு.. இனி ஜெட் வேகம் தான்..!
- போர் நிறுத்தம் என டிரம்ப் அறிவிப்பு.. உச்சத்திற்கு செல்கிறது இந்திய பங்குச்சந்தை..!
நேற்றைய சரிவுக்கு இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!
இந்திய பங்குச்சந்தை நேற்று திடீரென சரிந்து முதலீட்டாளர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில் இன்று மீண்டும் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.
இன்று காலை பங்குச்சந்தை வர்த்தகம் ஏற்றத்துடன் தொடங்கியது. மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 331 புள்ளிகள் உயர்ந்து 83,739 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இதேபோல், தேசியப் பங்குச்சந்தையின் நிஃப்டி 90 புள்ளிகள் அதிகரித்து 25,545 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில், அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், ஆக்ஸிஸ் வங்கி, பாரதி ஏர்டெல், சிப்லா, டாக்டர் ரெட்டி, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி வங்கி, இந்துஸ்தான் யூனிலீவர், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, இன்ஃபோசிஸ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்துள்ளது.
அதே சமயம், ஸ்டேட் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், பஜாஜ் பைனான்ஸ் உள்ளிட்ட சில பங்குகளின் விலை குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva
