1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Indian Stock Market Opens Higher Amid Investor Optimism

மீண்டும் ஏற்றத்தில் இந்திய பங்குச்சந்தை.. இனி உச்சம் தான் அடுத்த இலக்கு..!

share
இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகம் ஆகி வரும் நிலையில், நேற்று பங்குச்சந்தை ஏற்றத்தில் இருந்ததால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அந்த வகையில், இன்றும் பங்குச்சந்தை ஆரம்பத்திலேயே ஏற்றத்தில் இருப்பது பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
 
மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ், வர்த்தகம் சற்று முன் தொடங்கிய நிலையில், 300 புள்ளிகள் உயர்ந்து 81,300 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை நிப்பிட்டி 95 புள்ளிகள் உயர்ந்து 24,712 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
 
இன்றைய பங்குச்சந்தையில் சிப்லா, டாக்டர் ரெட்டி, எச்.சி.எல். டெக்னாலஜி, எச்டிஎஃப்சி வங்கி, ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இண்டஸ் இண்ட் வங்கி, இன்போசிஸ், ஐடிசி, மாருதி, ஸ்டேட் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ், சன் பார்மா, டாட்டா மோட்டார்ஸ், டாட்டா ஸ்டீல், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
 
அதேபோல், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஹிந்துஸ்தான் லீவர், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ராமதாஸ், அன்புமணி திடீர் சந்திப்பு.. தந்தை - மகன் சமாதானம் ஆகிறார்களா?