1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate in Chennai increases

பம்மிய தங்கத்தின் விலை மீண்டும் பாய்ந்தது!!

#GoldPrice
கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது இதன் விலை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. 
 
சமீப நாட்களாக கொரோனா காரணமாக தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்ததை தொடர்ந்து தங்கம் விலை இமாலய உச்சத்தை அடைந்தது. இதனால் தங்கம் வாங்குவதே கனவாக போய் விடுமோ என மக்கள் அஞ்சிய நிலையில் தங்கம் விலை தற்போது வேகமாக குறைய தொடங்கியுள்ளது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.40,888-க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.5,111க்கு விற்பனை. அதேபோல ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசு உயர்ந்து ரூ.76.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
அடுத்த கட்டுரையில்
எனக்கே விபூதி அடிக்க பாத்தியே! போலீஸுக்கே அபராதம் போட்ட போலி போலீஸ்!