திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (08:29 IST)

அதெல்லாம் முடியாது.. விநாயகர் சதுர்த்தி கொண்டாடியே ஆகணும்! – மல்லுக்கட்டும் இந்து முண்ணனி!

தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை வீட்டிலேயே கொண்டாட அறிவுறுத்தியது அரசியல் உள்நோக்கம் கொண்டது என இந்து முன்னணி தெரிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வீதிகளில் சிலை அமைத்த, ஊர்வலம் செல்லுதல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. மக்கள் அவர்கள் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிக் கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசின் இந்த அறிவிப்பிற்கு இந்து முண்ணனி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அரசியல் ஆதாயத்திற்காக தமிழக அரசு விநாயகர் சதுர்த்தியை தடை செய்துள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில் தடையை மீறி விநாயகர் சதுர்த்தியை நடத்துவோம் என இந்து முன்னணியினர் விடாப்பிடியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.