தொடர்புடைய செய்திகள்
- டான் படத்தின் காப்பியா ‘டிராகன்’?… இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆதங்கம்!
- குறைந்த விலையில் அனைத்து மருந்துகளும்.. 1000 இடங்களில் முதல்வர் மருந்தகம்!
- ஒரே நாளில் ரூ.920 குறைந்த தங்கம் விலை.. நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்!
- புனேவில் வேகமாக பரவும் ஜிபிஎஸ் நோய்.. பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு..!
- 7,360 கௌரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது? அண்ணாமலை கேள்வி..!
நேற்று தலைகீழாக குறைந்த தங்கம் விலை இன்று மீண்டும் ஏற்றம்.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?
தங்கம் விலை நேற்று மிக மிக பெரிய அளவில் சரிந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 1000 ரூபாய் தங்கம் குறைந்ததால் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை தற்போது பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் 40 ரூபாய் உயர்ந்து 7,980 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் 320 ரூபாய் உயர்ந்து விலை ரூபாய் 63,840 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,705 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,640 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 107.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 107,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது.
Edited by Siva
