புதன், 12 பிப்ரவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 12 பிப்ரவரி 2025 (12:27 IST)

டான் படத்தின் காப்பியா ‘டிராகன்’?… இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து ஆதங்கம்!

ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் பிப்ரவரி 21 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றுள்ளன. இந்த படத்தின் டிரைலர் இரு ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தினை நினைவூட்டுவதாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

இது சம்மந்தமாக பத்திரிக்கையாளர்கள் படத்தின் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்துவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அஸ்வத் “நானும் டான் படத்தைப் பார்த்துள்ளேன். நான் இயக்கிய ஒ மை கடவுளே படத்துக்காக ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளேன். பிரதீப் ஏற்கனவே லவ் டுடே என்ற 100 கோடி ரூபாய் வசூல் படத்தைக் கொடுத்துள்ளார். அப்படி இருக்கையில் நான் டான் படத்தைக் காப்பியடிப்பேன் என்று எது உங்களை நினைக்க வைத்தது.

டிரைலர் வேண்டுமானால் அப்படி இருக்கலாம். ஆனால் படம் பார்த்த பின்னர் யாரும் அந்த விமர்சனத்தை சொல்ல மாட்டார்கள்.” எனப் பதிலளித்துள்ளார். லவ் டுடே என்ற ஹிட் படத்தின் மூலம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்த ப்ரதீப்பின் அடுத்த படமாக ரிலீஸாவதால் டிராகன் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.