தங்கம் விலை கடந்த சில நாட்களாக வேகமாக உயர்ந்து வந்த நிலையில் இன்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் கிட்டத்தட்ட சவரன் ரூ.65 ஆயிரத்தை தொடும் வேகத்தில் பயணித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் தங்கம் புதிய உச்சத்தை அடைந்து வரும் நிலையில் கடந்த 2 நாட்களில் சவரனுக்கு ரூ.920 உயர்ந்த தங்கம் புதிய உச்சமாக சவரனுக்கு ரூ.64,480 ஆக விற்பனையானது.
இந்நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து சவரன் ரூ.63,520க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ரூ.120 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,940க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த 7 நாட்களாக வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.107 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை உயர்ந்து வரும் நிலையில் இன்று சற்று வீழ்ச்சியை சந்தித்துள்ளது மக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K