1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold Price Jumps Again: ₹320 Hike Per Sovereign

நேற்று ஒரே நாள் தான் சரிவு.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை.. ரூ.1.5 லட்சத்தை தாண்டிய வெள்ளி விலை..!

தங்கம் விலை
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சமீப காலமாக தங்கம் விலை உச்சத்துக்குச் சென்றது. இருப்பினும், நேற்று ஒருநாள் தங்கம் விலை சிறிது குறைந்த நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
 
சென்னையில் இன்று ஒரு கிராமுக்கு ரூ.40 ரூபாயும், ஒரு சவரனுக்கு ரூ.320 ரூபாயும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் ஒரு கிலோவுக்கு ரூ.3,000 ரூபாய் உயர்ந்து விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில், சென்னையில் இன்றைக்கு தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 10,510
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 10,550
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 84,080
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 84,400
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,465
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 11,509
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 91,720
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  92,072
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 153.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 153,000. 00
 
 
Edited by Siva
About Writer
Siva