திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (10:45 IST)

கூட்டணி வெச்சாதான் ஆட்சி; கூட்டணி ஆட்சியா? காமெடி பண்ணாதீங்க! – சிக்கலில் அதிமுக – பாஜக கூட்டணி

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக – அதிமுக இடையேயான கூட்டணி குறித்து அரசியல் பிரமுகர்கள் பேசி வருவது வைரலாகி வருகிறது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் அதிமுக – பாஜக இடையேயான நாடாளுமன்ற கூட்டணி, தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தொடரும் என இருகட்சி பிரமுகர்களும் கூறி வருகின்றனர்.

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையலாம் என பாஜக தரப்பில் பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் வேல் யாத்திரையின் போது பேசிய பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் “தமிழகத்தில் பாஜக கை காட்டும் நபர்தான் முதல்வராக முடியும்” என பேசியிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் விழா ஒன்றில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார் “தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. சட்டமன்ற தேர்தலில் அதிமுக தனித்து போட்டியிட்டு அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் அளவிற்கு வலுவாக உள்ளது” என கூறியுள்ளார். இதனால் தேர்தல் நெருங்கும் சமயம் இரு கட்சிகளிடையே கூட்டணி தொடர்பாக சர்ச்சை எழலாம் என அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்ளப்படுகிறது.