வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (11:07 IST)

நாடு முழுவதும் பட்டாசு வெடிக்க தடை!? – தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவால் அதிர்ச்சி!

எதிர்வரும் 14ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் நாடு முழுவதும் பல பகுதிகளில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் எதிர்வரும் 14ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் காற்று மாசு உள்ள பகுதிகளில் பட்டாசு வெடிக்க, விற்க தடை விதித்து தேசிய பசுமை தீர்பாயம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக கொரோனா காரணமாக ராஜஸ்தான், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுபடி நவம்பர் 10 முதல் 30 வரை டெல்லியில் பட்டாசு விற்க, வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர மத்திய அரசின் அதிக காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் உள்ள அனைத்து நகரங்களிலும் பட்டாசு வெடிக்க, விற்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பசுமை பட்டாசுகள் விற்கவும், வெடிக்கவும் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி, திருச்சி ஆகிய நகரங்கள் அந்த பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.