1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and silver rate of today

ஒரு கிராம் ரூ.5300ஐ நெருங்கிய தங்கம் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!

Gold
தங்கம் விலை கடந்து சில நாட்களாக ஏற்றத்தில் இருந்து வருகிறதுஎன்பதையும் குறிப்பாக 5000 ரூபாயை தாண்டி 6 ஆயிரம் ரூபாய் நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று தங்கம் ஒரு கிராம் 46 ரூபாய் உயர்ந்துள்ளதை அடுத்து ஒரு கிராம் 5296 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் 368 ரூபாய் உயர்ந்து 42,368 என விற்பனை ஆக்குகிறது. 
 
24 காரட் சுத்த தங்கம் ஒரு கிராம் ரூபாய் 5658.00 எனவும் 8 கிராம் ரூபாய் 45264.00 எனவும் விற்பனை ஆகிறது. தங்கம் போலவே இன்று வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. வெள்ளி ஒரு கிராம் ஒரு ரூபாய் அதிகரித்து 75 ரூபாய்க்கும், ஒரு கிலோ 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இன்னும் ஒரு சில மாதங்களில் தங்கம் விலை ஒரு கிராம் 6 ஆயிரம் ரூபாய் வரை எட்ட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!