1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendra
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (10:37 IST)

தொடர்ந்து 2வது நாளாக சரியும் பங்குச்சந்தை: முதலீட்டாளர்கள் கவலை!

பங்குச்சந்தை நேற்று காலை ஏற்றத்துடன் தொடங்கினாலும் மாலை முடியும்போது 500 புள்ளிகள் சென்செக்ஸ் குறைந்து இருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம்
 
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக பங்குச்சந்தை சரிவடைந்துள்ளது. இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கு மேல் சரிவடைந்து உள்ளது என்பதும் தற்போது 57890 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 115 புள்ளிகள் சரிந்து 17255 என்ற நிலையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பங்குச்சந்தை இந்த வாரத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்தது முதலீட்டாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது