திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 13 டிசம்பர் 2021 (18:35 IST)

காலையில் உயர்ந்த சென்செக்ஸ், மாலையில் சரிவு!

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை சென்செக்ஸ் காலையில் உயர்ந்ததை அடுத்து முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
 
ஆனால் நேரம் ஆக ஆக சென்செக்ஸ் சரிந்து வர்த்தகத்தின் முடிவில் 500 புள்ளிகள் சரிவை ஏற்படுத்தி இருந்தது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று வர்த்தகத்தின் முடிவில் 503 புள்ளிகள் சென்செக்ஸ் சரிந்தது என்பது இதனை அடுத்து 58 ஆயிரத்து 283 என்ற நிலையில் வர்த்தக முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் நிப்டி 143 புள்ளிகள் சரிந்தது என்பதும் 17 ஆயிரத்து 368 என்ற நிலையில் வர்த்தக முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது காலையில் உயர்ந்து மாலையில் திடீரென பங்குச்சந்தை சரிந்ததால் முதலீட்டாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது