கேழ்வரகு புலாவ் எப்படி செய்யவேண்டும்..!
கேழ்வரகு புலாவ் செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு -1 கப்
கடலை மாவு - கால் கப்
ஓமம் - சிறிதளவு
பெருஞ்சீரகம்- 1 ஸ்பூன்
மிளகாய் பொடி - தேவைக்கு
பாஸ்மதி அரிசி - 1 கப்
சீரகம் 1 ஸ்பூன்
வெங்காயம்- 2
இஞ்சி, பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
நெய்-1 ஸ்பூன்
முந்திரி பருப்பு -10
எண்னெய் -தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
எவ்வாறு செய்ய வேண்டும்:
பாஸ்மதி அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து உதிரியாக வடித்துக்கொள்ளவும். சீழ்வரகு மாவு, கடலை மாவுடன் ஓமம், பெருஞ்சீரகம், மிளகாய் பொடி , உப்பு, இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பிசைந்த மாவை ரொட்டி போல் திரட்டி சற்று கனமாக சிறு சிறு சதுரங்களாக கட் செய்துகொள்ளவும். இந்த துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு உடனே எடுத்து சற்று ஆறியவுடன் எண்ணையில் போட்டு பொரித்து எடுக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து 4 ஸ்பூன் என்னை விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும். இன்னொரு வெங்காயம் பச்சை மிளகாய் அரைத்துக்கொள்ளவும்., இந்த விழுது இஞ்சி போன்று விழுது இவற்றை போட்டு நன்றாக வதக்கி பொரித்த மாவு துண்டுகளையும் போட்டு கிளறி சாதத்தில் போட்டு தேவையான உப்பு இரண்டு ஸ்பூன் நெய்யில் முந்திரி வருது போட்டு கிளறவும். இப்போது தேவையான கேழ்வரகு புலாவ் ரெடி.