1. ப‌ல்சுவை
  2. அறுசுவை
  3. இனிப்புகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 14 நவம்பர் 2022 (11:37 IST)

பாசிப்பயறு கருப்பட்டி சுழியம் – சமைச்சு சாப்பிடலாம் வாங்க??

பாசிப்பயறு மற்றும் கருப்பட்டி வைத்து இனிப்பு பணியாரம் எப்படி செய்வது என தெரிந்துக்கொள்ளலாம் வாங்க…


என்னென்ன தேவை?
பாசிப்பயறு – ¼ கிலோ
மைதா – 100 கிராம்
கருப்பட்டி – 150 கிராம்
ஏலக்காய் – 3
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

எப்படி செய்வது?
பாசிப்பயறை இரண்டு மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து (குழைய வேக வைக்க வேண்டாம்) ஆறியதும் அதில் கருப்பட்டியை பொடியாக்கி சேர்த்து அறைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

இந்த அறைத்த கலவையுடன் ஏலக்காய் பொடி, தேங்காய் துருவல் சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.

மைதாமாவு எடுத்து சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கலந்து எடுத்துக்கொள்ளவும்.

அடுப்பில் எண்ணெய் காய வைத்து காய்ந்ததும் உருண்டுகளை மைதாமாவில் முக்கி எடுத்து பொறித்து எடுத்து பரிமாறவும்.