பகல் 12 மணிக்கே உறுதியானது வெற்றி – அசத்தும் திமுக வேட்பாளர்கள் !
வாக்கு எண்ணிக்கை பாதிகட்டத்தை எட்டும் முன்னரே திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் சிலர் எட்ட முடியாத அளவுக்கு வாக்கு வித்தியாசத்தைப் பெற்றுள்ளனர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு முன்னிலைப் பெற்று வருகின்றனர். காங்கிரஸ் மற்றும் பாஜக எதிர்ப்புக்கட்சிகளான மாநிலக் கட்சிகள் பின்னடைவை சந்தித்து வருகின்றனர். ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளிலும் அதிமுக 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் 6 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ள நிலையிலேயே திமுக கூட்டணி வேட்பாளர்கள் சிலர் தங்கள் வெற்றியை உறுதி செய்யும் அளவுக்கு முன்னிலைப் பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 19 பேர் முதல் சுற்றில் இருந்தே மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் உள்ளனர். அவர்களின் விவரம் பின்வருமாறு :-
-
திருநாவுக்கரசு – திருச்சி - 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
பாரிவேந்தர் – பெரம்பலூர் – 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
கவுதம் சிகாமணி – கள்ளக்குறிச்சி – 1.2 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
ஆ ராசா – நீலகிரி – 90000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
ஞானதிரவியம் – நெல்லை – 54,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
கனிமொழி – தூத்துக்குடி – 86,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
அண்ணாதுரை – திருவண்ணாமலை - 64,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
மாணிக் தாகூர் – விருதுநகர் – 55,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
பழனி மாணிக்கம் – தஞ்சாவூர் – 75,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
கணேசமூர்த்தி – ஈரோடு – 69,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
செல்வம் – காஞ்சிபுரம் – 90,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
வசந்தகுமார் – கன்னியாகுமரி – 60,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
ஜோதிமணி – கரூர் – 63,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
செல்வராஜ் – நாகப்பட்டிணம் – 50,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
சின்னராஜ் – நாமக்கல் – 67,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
விஷ்ணுபிரசாத் – ஆரணி – 61,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
தயாநிதி மாறன் – மத்திய சென்னை – 57,000 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
கலாநிதி வீராசாமி – வடசென்னை – 65,103 லட்சம் வாக்குகள் முன்னிலை
-
வேலுசாமி – திண்டுக்கல் – 90,000 லட்சம் வாக்குகள் முன்னிலை