ஆந்திர முதல்வராக பதவி ஏற்கும் ஜெகன் மோகன் ரெட்டி!
ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30 ஆம் தேதி பதவி ஏற்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
மொத்தம் உள்ள 175 இடங்களில் 148 இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் தெலுங்கு தேசம் 29 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது.
இவர்களுடன் மோதிய நடிகர் பவண் கல்யாணின் ஜன்சேனா கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகளால் கடும் அதிருப்தியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார் என செய்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது ஆந்திராவின் புது முதல்வராக ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30 ஆம் பதவி ஏற்கவுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.