அன்புமணிக்கு 200… திருமாவளவனுக்கு 2000 – இழுபறியில் இரண்டு தொகுதிகள் !
பாமக தலைவர் அன்பு மணி மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஆகிய இரண்டு பேரும் தத்தமது தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.
மகக்ளவைத் தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்திய அளவில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை பெற்றுள்ளனர். ஆனால் தமிழகத்தில் நிலைமை தலைகீழாக உள்ளது. திமுக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலைப் பெற்று வருகின்றனர். தமிழகத்தில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக 2 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் அதிமுக வேட்பாளர் அதிமுகவின் பொ சந்திரசேகரரும் ஓவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையின் போதும் இருவரும் மாறி மாறி முன்னிலை வகித்து வருவதால் கடுமையானப் போட்டி நிலவுகிறது. தற்போதைய நிலவரப்படி திருமாவளவன் 2000 வாக்குகள் கம்மியாக பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்.
அதுபோல தர்மபுரி தொகுதியில் போட்டியிட்டுள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ் இப்போது திமுக வேட்பாளர் எஸ் செந்தில்குமாரை விட 200 வாக்குகள் கம்மியாக வாங்கி தற்ப்போதைய நிலவரப்படி பின்னடைந்துள்ளார்.