வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Updated : வியாழன், 23 மே 2019 (12:41 IST)

தேர்தல் முடிவுகளால் அப்செட்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா!

தேர்தல் முடிவுகளால் கடும் அதிருப்தியில் உள்ள ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். 
 
ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. அங்கு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
 
மொத்தம் உள்ள 175 இடங்களில் 149 இடங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. ஆளும் கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் தெலுங் தேசம் 26 தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளது. 
 
இவர்களுடன் மோதிய நடிகர் பவண் கல்யாணின் ஜன்சேனா கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலை பெறவில்லை.