வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (10:35 IST)

அமேதியில் ராகுல் தோற்றது எப்படி ? – பாஜகவின் 5 ஆண்டு திட்டம் !

மக்களவைத் தேர்தலில் தங்கள் குடும்பத்தின் ஆஸ்தான தொகுதியான் அமேதியில் போட்டியிட்ட ராகுல் காந்தி தோல்வியடைந்திருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

செனற 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் இதே தொகுதியில் ராகுலை எதிர்த்து ஸ்மிருதி ரானிதான் வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியடைந்தார். ஆனால் தோல்வி அடைந்தாலும் அதேத் தொகுதியில் தங்கி அத்தொகுதிகளின் நிறை குறைகளைப் பற்றி நன்கு அறிந்து மக்களோடு உரையாடியுள்ளார்.

தெளிவாக சொல்லவேண்டுமென்றால் வெற்றி பெற்ற ராகுல் காந்தியை விட தோல்வி அடைந்த ஸ்மிருதி ரானி அந்த தொகுதிக்காக சிறப்பாக உழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஸ்மிருதி ரானியின் இந்த பணி குறித்து பல முறை ராகுலிடம் சொல்லியபோதும் அவர் அதை பெரிதாகக் கண்டுகொல்லவில்லை.

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்  தங்கள் தொகுதியில் ஒரு கிராமத்தைத் தத்தெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின்படி அமேதி தொகுதியிலுள்ள ஜெகதீஷ்பூர் கிராமத்தை ராகுல் காந்தி தத்தெடுத்தார். இந்த விழாவுக்காக அவர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெகதீஷ்பூருக்கு வந்தார். அதன்பின் இந்தத் தேர்தல் சமயம் வரை அவர் தான் தத்தெடுத்த கிராமத்துக்கே வரவில்லை. ஆனால் அந்த கிராமத்த்துக்குக் கூட சென்று ஸ்மிருதி ராணி மக்களோடு உரையாடி இருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தின் போதும் இவற்றை சொல்லியே வாக்குகளைப் பெற்றுள்ளா.