ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (09:03 IST)

நாட்டின் மூன்றாவது பெரியக் கட்சி – உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தேசிய அளவில் மூன்றாவது பெரியக் கட்சியாக திமுக எழுச்சி பெற்றுள்ளது.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் தமிழகத்தில் அதற்குத் தலைகீழாக பாஜகவால் ஒரு தொகுதியைக் கூட கைப்பற்ற முடியவில்லை. 5 தொகுதிகளில் ஸ்டார் வேட்பாளர்களை நிறுத்தியும் பாஜக வால் ஒருத் தொகுதியைக் கூட வெற்றி பெற முடியவில்லை. பாஜக கூட்டணியில் அதிமுக மட்டுமே ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 39 தொகுதிகளில் 38 தொகுதிகளைக் கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றுள்ளது.

திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் நின்ற வேட்பாளர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். இதன மூலம் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்த படியாக திமுக தேசிய அளவில் மூன்றாவது பெரியக் கட்சியாக உருவாகியுள்ளது. இந்த பிரம்மாண்ட வெற்றியை கலைஞருக்கு சமர்ப்பணம் செய்வதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆந்திராவின் ஜெகன் மோகன் ரெட்டி 21 தொகுதிகளிலும் மேற்கு வங்கத்தின் மம்தா 19 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.