ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (09:14 IST)

நாளைய ஆளும்கட்சியாக மாறுமா நாம் தமிழர் கட்சி?

சீமானின் நாம் தமிழர் கட்சி இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் டெபாசிட்டுகளை இழந்தும், நோட்டாவுடன் போட்டி கொண்டும் இருந்த நிலையில் இந்த தேர்தலில் அந்த கட்சிக்கு வாக்கு சதவிகிதம் ஆச்சரியப்படும் அளவுக்கு அதிகரித்துள்ளது.
 
திருவள்ளூர், வடசென்னை, தென்சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், கோவை, திண்டுக்கல், திருச்சி, பெரம்பலூர், நாகை, தஞ்சாவூர், சிவகெங்கை, விருதுநகர், தென்காசி ஆகிய தொகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேல் நாம் தமிழர் வேட்பாளர்கள் பெற்றுள்ளனர். அதேபோல் தமிழகத்தில் தேர்தல் நடந்த 38 தொகுதியிலும் நாம் தமிழர் வேட்பாளர்கள் இந்த முறை ஐந்து இலக்கங்களில் ஓட்டுக்களை பெற்றுள்ளது அவர்களது நல்ல வளர்ச்சியை காட்டுகிறது.
 
திமுக, அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளையும் வெறுக்கும் மக்களின் தேர்வாக உள்ள கட்சிகளில் ஒன்றாக நாம் தமிழர் கட்சி உருவாகியுள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சி, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்தால் இரண்டு திராவிட கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட வாய்ப்பு உள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.