புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By
Last Modified: வெள்ளி, 24 மே 2019 (09:28 IST)

தோற்றால் என்ன ? .. இருக்கிறது மாநிலங்களவை எம்.பி – கூல் மோடில் அன்புமணி !

மக்களவைத் தேர்தலில் தோற்றுள்ள பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி மாநிலங்களவை எம்.பி பதவி பெறும் முனைப்பில் உள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் நேற்று வெளியாகின. தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வியுள்ளது. அதிமுக – பாமக – தேமுதிக  என வலுவான கூட்டணி அமைத்தும் அவர்களால் ஒருத் தொகுதிக்கு மேல் வெற்றி பெறமுடியவில்லை. இதில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகவுக்கு அதிர்ச்சி அதிகம். தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட அன்புமணி கிட்டதட்ட 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுள்ளார். அதனால் பாமகவினர் சோகமாக இருக்க அன்புமணியோ வழக்கம் போல கூலாக இருக்கிறாராம்.

இதற்குக் காரணம் அதிமுகவோடு கூட்டணி  ஒப்பந்தம் போடப்பட்டபோது 7 மக்களவை சீட் மற்றும் 1 மாநிலங்களவை சீட் என பேசியுள்ளனர். அதனால் இப்போது மக்களவையில் தோல்வி அடைந்தாலும் மாநிலங்களவை எம்பி சீட்டைத் தானே பெற்றுவிடலாம் என்ற ஆசையில்தான் கூலாக இருக்கிறாராம்.