புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 சிறப்பு நிகழ்வுகள்
Written By
Last Updated : புதன், 20 மார்ச் 2019 (12:37 IST)

ஈபிஎஸ், ஓபிஎஸ்-க்கு பயம் காட்டும் தினகரன்? கெத்தாய் வளம்வரும் ஸ்டாலின்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் அறிவித்துள்ள நிலையில், அடுத்து பிரச்சாரத்திற்காக ஆயத்தமாகி வருகின்றனர். 
 
அதிமுக மற்றும் திமுக இடையே பெரிய போட்டி நிலவக்கூடும் ஏனெனில் இவ்விரு கட்சிகளும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களை இழந்த தேர்தலை சந்திக்கிறது. ஆனால், டிடிவி தினகரனின் அமமுக கட்சி தனித்து கூட்டணி இன்றி தேர்தலில் போட்டியிடுகிறது. 
 
இந்நிலையில், அமமுக போட்டியால் யாருக்கு லாபம் என கணக்குப்போட்டு வருகின்றனர். ஆட்சியை காப்பாற்றவும், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கவும், 18 தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அதிமுக உள்ளதால் அக்கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதிமுக தொண்டர்கள் யார் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபிக்க அமமுக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டிருப்பது அதிமுகவின் வாக்கு வங்கியை பாதிக்குமா என்ற அச்சம் நிலவியுள்ளது. 
 
இந்த வாக்கு வங்கி பாதிப்பு திமுக கூட்டணிக்கு சாதமாகுமோ என்ற அச்சமும் அதிமுகவிடம் உள்ளது. அமமுக அதிமுக வாக்குகளை பிரிப்பது நிச்சயம் திமுகவுக்கு லாபம் என கருதப்படுகிறது.