வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (12:19 IST)

திமுக VS அதிமுக : தேர்தல் அறிக்கையின் ஒற்றுமை அம்சங்கள்!!!

தற்போது வெளியாகியுள்ள திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள ஒற்றுமையான அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
 
சற்று முன்னர் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின்  தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அதிமுகவின் தேர்தல் அறிக்கையை ராயப்பேட்டை கட்சி அலுவலகத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டார்.
 
அதிமுக மற்றும் திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அதில் திமுக மற்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் உள்ள ஒற்றுமையான அம்சங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
 
* கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரப்படும்
 
* மாணவர்களின் கல்விக் கடன் முழுமையாக ரத்து செய்யப்படும்
 
* மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு முறை ரத்து செய்யப்படும்
 
* தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு
 
* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க நடவடிக்கை
 
* காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை
 
* தமிழ்மொழியை மத்திய அரசு அலுவலகங்களில் அலுவல்மொழியாக்க நடவடிக்கை
 
* கேபிள் டிவி சேவைக்கான கட்டணம் குறைக்கப்படும்