அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நவரச நாயக நடிகர்!!!

Last Modified செவ்வாய், 19 மார்ச் 2019 (12:05 IST)
நடிகர் கார்த்திக் தேர்தலில் தனது ஆதரவை அதிமுகவிற்கு அளிப்பதாக கூறி இருக்கிறார்.
 
நவரச நாயகன் கார்த்திக் கடந்த 2006ஆம் ஆண்டு பார்வார்டு பிளாக் கட்சியில் சேர்ந்து முதலில் அரசியலில் குதித்தார். பின்னர் 2009ஆம் ஆண்டு அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தார். அதே ஆண்டில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு 15000 வாக்குகள் பெற்றார். பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 
 
இதற்கிடையே கார்த்திக், கடந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் என கூறி பரபரப்பை கிளப்பினார்.
 
இந்நிலையில் இன்று அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருக்கும் நிலையில் நடிகர் கார்த்திக் மக்களவை தேர்தலில் தனது ஆதரவு அதிமுகவிற்கு என தெரிவித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :