வியாழன், 28 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 19 மார்ச் 2019 (15:47 IST)

அதிமுகவில் கார்த்திக் – ஜாதி ஓட்டுகளைக் கைப்பற்ற திட்டமா ?

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான கார்த்திக் அதிமுக வுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

நடிகர் கார்த்திக் அகில இந்திய நாடாளுமன்றக் கட்சி என்ற கட்சியை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆனால் அது ஒரு லெட்டர் பேடு கட்சியாகவே இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் கிணற்றில் போட்ட கல் போல இருந்துவருகிறது.

இந்நிலையில் இப்போது தேர்தலை முன்னிட்டு அக்கட்சியினை மீண்டும் தூசு தட்டி வெளியில் எடுத்துள்ளார் கார்த்திக். தேர்தலை முன்னிட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று அதிமுக. தலைமை அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ‘அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஒருக் குறையும் இல்லாமல் உள்ளது. நான் அதிமுகவிற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யப்போகிறேன். இதனை நீங்கள் நான் அதிமுகவில் சேர்ந்துவிட்டதாகவும் நினைத்துக்கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.’ எனக் கூறினார்.

கார்த்திக்கின் திடீர் வருகைக்கு அதிமுக வட்டாரத்தில் காரணமாக சொல்லப்படுவது என்னவென்றால் தினகரன் அதிமுக வை விட்டு விலகிவிட்டதால் அவர் சார்ந்த சமுதாயத்தின் வாக்குகள் அமமுகவுக்கே கிடைக்கும் என்ற அச்சம் உள்ளது. அதனால் அதே சமுதாயத்தைச் சேர்ந்த கார்த்திக்கை இப்போது அதிமுக தலைமை பிரச்சாரத்திற்கு உபயோகப்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.