வாக்காளர்களுக்கு பணமா ? தினகரன் கட்சி பிரமுகர் வீட்டில் ரெய்டு

ammk
Last Modified செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (17:11 IST)
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்றுடன் பிரசாரம் முடிவடைகிறது. அதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் காரசாரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு கொடுக்க பணம் வைத்திருப்பதாக வந்த புகாரின் பேரில் தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முக்கிய பிரமுகர் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகிறது.
 
திருவள்ளூர் மாவட்ட அமமுக பேச்சாளர் பொன்முடி என்பவர் வீட்டில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தினர்.
 
இதனால் அக்கட்சியினர் மற்றும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :