தினகரனுக்கு ஓட்டு போடுங்கள்: சுப்பிரமணியம் சுவாமியின் டுவீட்டால் பாஜகவினர் அதிர்ச்சி

subramaniya swamy
Last Updated: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (06:49 IST)
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஏற்கனவே தமிழகத்தில் பாஜக ஐந்து தொகுதிகளை மட்டுமே பெற்றுள்ளதால் தான் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று கூறியுள்ள நிலையில் தற்போது தினகரனுக்கு ஓட்டு போடுங்கள் என்று அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியபோது, 'விஷ்வ ஹிந்து சபையுடன் ஆலோசனை செய்த பின்னர், தமிழகத்திலுள்ள தேசியவாதிகள் தினகரனின் அமமுக கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஊழலைப் பொறுத்தவரை தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரிதான். ஆனால், தினகரனைச் சேர்ந்தவர்கள் தேசிய ஒற்றுமைக்கான நல்லவர்கள்' என்று தெரிவித்துள்ளார். சுப்பிரமணியம் சுவாமியின் இந்த டுவீட்டால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தினகரன் தனது ஒவ்வொரு தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வரும் நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் ஒருவரே தினகரனுக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா சிறைக்கு செல்லும் முன்னரே, அவர் தான் முதல்வராக வேண்டும் என்று சுப்பிரமணியம் சுவாமி கூறியவர் என்பது குறிப்பிடத்தக்கதுஇதில் மேலும் படிக்கவும் :