வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Modified: செவ்வாய், 16 ஏப்ரல் 2019 (11:16 IST)

நோட்டாவுக்கு வாக்களியுங்கள் – அதிமுக தொண்டர்களுக்கு நடிகர் ஆனந்தராஜ் அறிவுரை !

பிரபல நடிகரும் அதிமுகவின் பிரபல பேச்சாளருமான ஆனந்தராஜ அதிமுக தொண்டர்களை நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு அறிவுரைக் கூறியுள்ளார்.

பிரபல நடிகரும் முன்னாள் அதிமுக பேச்சாளருமான ஆனந்தராஜ் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் காலத்தில் அதிமுகவிற்காக தேர்தல்களில் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அவரின் மறைவிற்குப் பிறகு கட்சியில் இருந்து விலகினார்.

அதையடுத்து அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்து அதிமுகவின் நடவடிக்கைகளைப் பற்றி விமர்சனம் செய்து வந்தார். அதிமுக குடும்ப மற்றும் வாரிசு அரசியலின் கையில் சிக்கிக்கொள்ள கூடாது எனக் கூறியிருந்தார். இதையடுத்து இப்போது தேர்தலுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருக்கும் நிலையில் அதிமுக தொண்டர்கள் அனைவரும் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.